சிவகாசி,
காமராஜரின் பிறந்தநாளையொட்டி சிவகாசியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. சிவகாசி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் அய்யனார் தலைமையில் வந்த மருத்துவகுழுவினர் சமூக ஆர்வலர்களிடம் இருந்து ரத்தம் சேகரித்தனர். இந்த முகாமில் 78 பெண்கள் உள்பட 380 பேர் ரத்ததானம் செய்தனர். இதில் சிவகாசியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் 100-வது முறையாக ரத்ததானம் செய்தார். ரத்ததானம் செய்தவர்களுக்கு டாக்டர் அய்யனார் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கவுரவ சான்றிதழ் வழங்கினர்.