சுவரொட்டியை கிழித்ததை கண்டித்து சாலை மறியல்
சுவரொட்டியை கிழித்ததை கண்டித்து சாலை மறியல்
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை புறவழிச்சாலை காந்திநகர் மேம்பால சுற்றுச்சுவரில் பல்வேறு தரப்பினர் அரசியல் கட்சியினர் பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்டி வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தினர் புறவழிச் சாலை மேம்பால சுவரில் சுவரொட்டி ஒட்டி இருந்தனர். இதை நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தினர் கிழித்து அகற்றியதாக தெரிகிறது.. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் கழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அருப்புக்கோட்டை-ராமேசுவரம் சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்த முயன்றனர் அப்போது அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசாரின் சமாதனத்தை ஏற்காமல் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது. மேலும் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தினர் புதிதாக சுவரெட்டி அடித்து ஒட்டி தருவதாக உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.