கருப்பு கொடி ஏந்தி சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கருப்பு கொடி ஏந்தி சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
சத்தியமங்கலம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சத்தியமங்கலத்தில் உள்ள உதவிக்கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளத்தை பிடிக்காமல் வழங்க வேண்டும், மழைக்கால உடை வழங்க வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில செயலாளர் செந்தில்நாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.