பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
ராசிபுரத்தில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
ராசிபுரம்:
தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் சேதுராமன், வடிவேல், நாகராஜன், சத்தியபானு, மத்திய அரசு திட்டப்பிரிவு மாநில துணைத் தலைவர் லோகேந்திரன், விவசாய அணி மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் தங்கபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஹரிஹரன், சித்ரா, மாவட்ட ஓ.பி.சி அணி துணை தலைவர் குமார்் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நிர்வாகிகள், தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருவதாகவும், ஊழல்களில் ஈடுபடுவதாகவும் பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டி பேசினர்.