பா.ஜ.க. இளைஞர் அணி செயற்குழு கூட்டம்

சிதம்பரத்தில் பா.ஜ.க. இளைஞர் அணி செயற்குழு கூட்டம்

Update: 2023-04-24 18:45 GMT

சிதம்பரம்

சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள தனியார் விடுதியில் கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஶ்ரீதர், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் சக்திவேல் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் மருதை பேசும்போது, வருகிற ஜூன் மாதம் என் மண், என் மக்கள் நடைபயண சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை முதலாவதாக கடலூர் மாவட்டத்துக்கு வர உள்ளார் என்றார். தொடர்ந்து மாவட்ட பா.ஜ.க. துணை தலைவர் கோபிநாத் கணேசன், மாநில பட்டியல் அணி துணை தலைவர் சரவணக்குமார், நகர தலைவர் வக்கீல் சத்தியமூர்த்தி ஆகியோரும் பேசினார்கள். கூட்டத்தில் கடல்நீர் உட்புகாமல் இருக்க புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும், என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வீட்டிற்கு ஒருவருக்கு வேலை, ஏக்கருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பெருமாள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்