320 இடங்களில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்டம் முழுவதும் 320 இடங்களில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-23 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்டம் முழுவதும் 320 இடங்களில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

தமிழக பா.ஜ.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி வார்டுகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 320 இடங்களில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் நகர் சார்பில் கேணிக்கரை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தரணி முருகேசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சியில், தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், மணல் மற்றும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், டாஸ்மாக் மதுக்கடையை மூடி கஞ்சா, கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.

10 அம்ச கோரிக்கை

ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளை மேம்படுத்த வேண்டும், பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி தரமான கல்வி வழங்க வேண்டும், உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது போன்ற 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், யூனியன் கவுன்சிலர் முருகன், கலாராணி, பிரவின்குமார், மணிமாறன், குமரன், வீரபாகு உள்பட மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம், சாயல்குடி

ராமேசுவரத்தில் பஸ் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. நகர் தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாவட்ட பொது செயலாளர் பவர் நாகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர் பொருளாளர் சுரேஷ், நகர் பொதுச் செயலாளர்கள் செல்வம், முருகன், முன்னாள் ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் பூபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயந்தி, கலை கலாசார பிரிவு மாவட்ட தலைவர் ராமநாதன், இளைஞரணி நகர் தலைவர் ஞானகுரு, ஓ.பி.சி. அணி நகர் தலைவர் சங்கிலிகுமரன், பிரசார பிரிவு நகர் தலைவர் பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாயல்குடியில் பா.ஜ.க. கடலாடி தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கடலாடி தெற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ராஜசேகர பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பத்திரகாளிமுத்து, பொருளாளர் ராஜவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், முன்னாள் பிரசார அணி மாநில செயலாளர் நாகூர் பாண்டியன், நிர்வாகிகள் ராஜேந்திரன், இந்து மாரிமுத்து, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட விவசாய அணி செயலாளர் காவா குளம் வீரபத்திரன், ஒன்றிய வழக்கறிஞர் பிரிவு தலைவர் சக்திவேல், இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் மதன் ராஜா, இளைஞர் அணி ஒன்றிய தலைவர் ராஜவேல், அமைப்புசாரா ஒன்றிய தலைவர் மாரிமுத்து, இளைஞர் அணி ஒன்றிய துணை தலைவர் வீர முருகன், பேரூர் தலைவர் குரு முருகன், கிளை தலைவர்கள் தங்கலிங்கம், ராமகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி துணை தலைவர் சங்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் லிங்கப்பாண்டி, நிர்வாகிகள் சண்முகநாதன், காமராஜ், கருணாமூர்த்தி, அழகு வீரபத்திரன், ஆன்மிக பிரிவு ஒன்றிய தலைவர் பாலா சிவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்