பா.ஜ.க. தெற்குமண்டல செயற்குழு கூட்டம்

முத்தையாபுரத்தில் பா.ஜ.க. தெற்குமண்டல செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-07-26 15:38 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி தெற்கு மண்டல பா.ஜ.க. செயற்குழு கூட்டம் முத்தையாபுரம் தோப்பு தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். மண்டல பொதுச் செயலாளர் மகேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், முத்துக்கிருஷ்ணன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மண்டல பகுதிக்கு தனியாக 108 ஆம்புலன்ஸ் வசதி அமைத்துத் தரவேண்டும், அனைத்து. பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், 54-வது வார்டு அய்யங்கோவில் தெரு, அம்மன்கோவில் தெரு, திருமாஜி நகர் பகுதியில் கழிவு நீர் செல்ல நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் மகளிர் அணி தெற்கு மண்டல தலைவி செல்வி, தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் புனிதா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்