அரசு ஆஸ்பத்திரி முன்பு பா.ஜ.க.வினர் சாலை மறியல்

அரசு ஆஸ்பத்திரி முன்பு பா.ஜ.க.வினர் சாலை மறியல்

Update: 2023-04-22 18:45 GMT


ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசனை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை கூலிப்படையை சேர்ந்த இருவர் கொலை செய்ய முயன்றனர்.. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கூலிப்படையினர் தாக்கியதில் தரணி முருகேசன் மேலாளர் கணேசன் என்பவர் படுகாயம் அடைந்தார். இவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவரை ஆஸ்பத்திரி நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் தன்னை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டாம் என கணேசன் கூறியதாக கூறப்படுகிறது.

இதையறிந்த பா.ஜ.க.வினர் தரணி முருகேசன் தலைமையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்