வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-20 19:20 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர் மாவட்ட பா.ஜ.க. மகளிரணி சார்பில் விஷசாராயம் குடித்து பொதுமக்கள் பலர் உயிரிழந்ததை கண்டித்து வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மகளிரணி தலைவர் செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மனோகரன், பொதுச்செயலாளர்கள் பாபு, ஜெகன்நாதன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளாக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷசாராயம் குடித்து பொதுமக்கள் பலர் உயிரிழந்ததை கண்டித்தும், விஷசாராயம் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தமிழக அரசை கண்டித்தும், தெருக்கள்தோறும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் வணிகப்பிரிவு மாநில செயலாளர் இளங்கோ, மகளிரணி பொதுச்செயலாளர்கள் கீதா, மஞ்சு, ஷகிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிரணி துணைத்தலைவி மலர்கொடி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்