மாநகராட்சியை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

நெல்லையில் மாநகராட்சியை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-07 19:05 GMT

நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகரில் மத்திய அரசு நிதி உதவியுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி குறித்து அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி பணிகளை தாமதப்படுத்தி மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைத்து செயல்படும் மாநகராட்சியை கண்டித்தும், சாலை, பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், சந்திப்பு பஸ்நிலையத்தை உடனடியாக பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் டி.வி.சுரேஷ், முத்து பலவேசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், குட்டி என்ற வெங்கடாஜலபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்