பா ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
எதிர்க்கட்சிகளை கண்டித்து பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை
அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு கோவை வடக்கு மாவட்டம் சார்பில் கோவை கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்.
அக்னிபத் திட்டத்தை ஆதரித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் எதிர்க்கட்சிகளை கண்டிக்கிறோம்.
அக்னிபத் திட்டத்தில் உள்ள நல்ல அம்சங்கள் குறித்து மக்களிடம் விளக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்த திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு தொழில் கல்வி வழங்கப்படுவதுடன், பணப் பலனும் கிடைக்கிறது என்றனர். இதில் முன்னாள் தலைவர்கள் தேவன், மோகனகுமார், பிரபாகரன், செயலாளர் அனிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.