பா.ஜ.க. சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-12-04 17:04 GMT

கண்ணமங்கலம்

பா.ஜ.க. சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கண்ணமங்கலம் பஸ் நிலையம் அருகே ஏரிக்கு செல்லும் கழிவு நீர் கால்வாய் மீது கடந்த ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர் ெதாகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் சுவர் கட்டப்பட்டது. இந்த இடத்தில் வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லம் பஸ்கள் நின்று செல்கின்றன. ஆனால் பயணிகளில் சிலர் நிழற்கூடம் உள்ளே அமராமல் சிலர் சாலையில் உள்ள சிமெண்ட் சுவர் மீது ஆபத்தான முறையில் அமருகின்றனர்.

இந்த நிலையில் சுவரை அகற்றக்கோரி நெடுஞ்சாலை துறையினரை வலியுறுத்தி பா.ஜ.க. வாயில் கருப்பு துணி கட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் ரேகா, மாவட்ட தலைவர் கோதண்டராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து பா.ஜ.க. விவசாய அணி செயற்குழு உறுப்பினர் ரேகா கூறுகையில், ''பஸ்கள் நின்று செல்லும் சாலையில் பழைய சிமெண்ட் சுவரை அகற்ற வேண்டும். இதனால் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்லும். போக்குவரத்து பாதிப்பும் குறையும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்