திருவாரூர் மாவட்டத்தில் 12 இடங்களில் பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல்

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்காததை கண்டித்து கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் 12 இடங்களில் பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-06 19:00 GMT

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்காததை கண்டித்து கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் 12 இடங்களில் பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அம்பேத்கரின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து கட்சியினரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக தஞ்சையில் பா.ஜனதா கட்சியினர் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்காததை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் 12 இடங்களில் பா.ஜனதா கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருவாரூர் விளமல் கல்பாலம் அருகில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசன், மாவட்ட செயலாளர் ரவி, நகர தலைவர் கணேசன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் சங்கர், ஒன்றிய தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டம் காரணமாக அங்கு அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மன்னார்குடி

அதேபோல் மன்னார்குடி பஸ் நிலையத்தில் பா.ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை அருகே கோபாலசமுத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் பா.ஜனதா கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில் 40-க்கும் மேற்பட்ட பா.ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர். இதனால் முத்துப்பேட்டை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த முத்துப்பேட்டை போலீசார் அங்கு சென்று பா.ஜனதா கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக அங்கு அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்