கள்ளக்குறிச்சியில்இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை :123 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் 123 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-11 18:45 GMT


சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், மாநாட்டில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதாவினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும், அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிடுவதற்காக திரண்டு வந்தனர்.

இதற்கு மாவட்டத் தலைவர் அருள் தலைமை தாங்கினார்.மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜேஷ், தியாகராஜன், மாவட்ட செயலாளர் ஹரி, மாவட்ட துணைத் தலைவர் சர்தார் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

123 பேர் கைது

அப்போது, அவர்கள் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியபடி, இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அப்போது, அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதன் மூலம் 123 பேர் கைதானார்கள். இவர்கள் அனைவரும் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட மகளிர் அணி தலைவி அலமேலு ஆறுமுகம், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் தேவசந்திர குமார், பட்டியல் அணி மாவட்ட தலைவர் மாரியபிள்ளை மற்றும் நிர்வாகிகள் முருகன், ராஜேந்திரன்மூர்த்தி, பாலு, அங்கமுத்து, கஜேந்திரன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்