வந்தவாசியில் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்

வந்தவாசியில் மாநில அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-06 11:11 GMT

வந்தவாசி

வந்தவாசியில் மாநில அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் வந்தவாசி தேரடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திமுக அரசு மக்கள் விரோத நடவடிக்கைககளை மேற்கொள்வதாக புகார் தெரிவித்து நடந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சி.ஏழுமலை தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் பி.முத்துசாமி, மாவட்டச் செயலாளர் வி.குருலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் ஆர்.சுரேஷ் வரவேற்றார்.

மாநில துணைத் தலைவர் பா.டால்பின் ஸ்ரீதர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பி.பாஸ்கர் உள்ளிட்டோர் தி.மு.க. அரசை கண்டித்து பேசினர். போராட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வந்தவாசியில் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்

Tags:    

மேலும் செய்திகள்