தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது- எல்.முருகன்

தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-18 10:39 GMT

சென்னை,

பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய இணை மந்திரியுமான எல்.முருகன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க. எந்த அளவு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது.

வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் ராகுல் காந்திக்கு பிறகு அவரது தங்கை போட்டியிடுகிறார். இது அவரின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது என்பதை காட்டுகிறது. அவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள். இதில் ஆச்சரியம் படுவதற்கு ஒன்றுமில்லை.

அண்ணாமலை சிறந்த தலைவராக வேலை செய்து வருகிறார் . ரெயில் விபத்துக்கள் (மேற்குவங்காள ரெயில்கள் விபத்து) தவிர்க்க முடியாத ஒன்று. ரெயில்வே மந்திரி நேரடியாக சென்று தேவையான உதவிகளை செய்து வருகிறார் .

இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்