பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மதுரையில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும், நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். அதன்படி மதுரை மாநகரில் நடைபெற உள்ள நடைபயண நிகழ்ச்சி குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று பா.ஜனதா கட்சி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். நடைபயண யாத்திரை வெற்றி யாத்திரையாக்க அனைத்து நிர்வாகிகளும் முழு மூச்சுடன் உழைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, முன்னாள் மாவட்ட தலைவர் சசிராமன், பொதுச்செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.