ஈபிஎஸ்-ஐ விமர்சித்த பாஜக நிர்வாகி... மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்... ஆர்ப்பாட்ட மேடையில் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சிக்க முயன்றபோது மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் திடீரென அவரிடம் இருந்து மைக்கை பறித்தார்.
சென்னை,
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காவல்துறை பொய் வழக்கு பதிவுசெய்ததாக கூறி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய சென்னை மத்திய மாவட்ட பாஜக தலைவர், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சிக்க முயன்றார். அப்போது மாநில துணை தலைவர் கரு. நாகராஜன், திடீரென அவரிடம் இருந்து மைக்கை பறித்தார்.
அதிமுக- பாஜக இடையே மோதல் போக்கை தணிக்க இரு தரப்பும் முயற்சி செய்து வரும் நிலையில், பாஜக நிர்வாகி ஒருவர், எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க முயன்றது, அதனை தவிர்க்கும் விதமாக மாநில துணைத்தலைவர் மைக்கை பறித்ததும் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.