பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

வடமதுரை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் அய்யலூரில் நடந்தது.

Update: 2023-05-31 19:00 GMT

வடமதுரை கிழக்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் அய்யலூரில் நடந்தது. இதற்கு ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட கலை, கலாசார பிரிவு தலைவரும், கிழக்கு ஒன்றிய பார்வையாளருமான சண்முகம் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொதுச்செயலாளர் பால்ராஜ் வரவேற்றார். இதில் அய்யலூர் பேரூராட்சி அ.கோம்பை பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கவேண்டும், சுக்காம்பட்டி ஊராட்சி வளவிசெட்டிபட்டியில் மயானப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், பாகாநத்தம் ஊராட்சி ஜங்கால்பட்டி முதல் புதூர் வரை புதிய தார்சாலை அமைக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் சிம்மராஜா, மாவட்ட பட்டியல் அணி தலைவர் ஜெகனாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, ஒன்றிய பொதுச்செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவில் ஒன்றிய துணைத்தலைவர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்