திண்டிவனத்தில் பா.ஜ.க. அரசின் சாதனை குறித்த விளக்க பேரணி
திண்டிவனத்தில் பா.ஜ.க. அரசின் சாதனை குறித்த விளக்க பேரணி நடைபெற்றது.
திண்டிவனம்,
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 8-ம் ஆண்டு நிறைவு மற்றும் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பேரணி திண்டிவனத்தில் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி சார்பில் நடைபெற்ற சாதனை விளக்க பேரணிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணி செயலாளர் மீனாட்சி சுந்தரம் கலந்துகொண்டு மத்திய அரசின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றியதோடு, பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது திண்டிவனம் போலீஸ் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு, செஞ்சி ரோடு வழியாக அண்ணா சிலையை சென்றடைந்தது. பேரணியில் பொது செயலாளர்கள் பாண்டியன், ராம.ஜெயக்குமார், சிவ.தியாகராஜன், பொருளாளர் சுகுமார், மகளிர் அணி நிர்வாகிகள் சரண்யா, ராதிகா, வசந்தி முருகேசன், விஜயலட்சுமி, ஜமுனாராணி நிர்வாகிகள் முருகப் பெருமாள், முருகன், வக்கீல் ராஜா, செந்தில் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. நிகழ்ச்சி பொறுப்பாளர் ஜின்ராஜ் செய்திருந்தார்.