பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

விக்கிரமசிங்கபுரத்தில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-12-24 22:14 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் அருகில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களை அனுமதிக்க வேண்டும். காரையார், சேர்வலார் அணைகளை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும். சோதனைச்சாவடியில் இருந்து நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர தலைவர் ராஜ் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் தங்கேஸ்வரன் முன்னிலை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் ராம்ராஜ் பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வெங்கடேஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் யோவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசந்தர், நகர பொருளாளர் சண்முகானந்தம், நகர செயலாளர் முனியராஜ், வர்த்தக பிரிவு தலைவர் அண்ணாமலை, நெசவாளர் பிரிவு தலைவர் பாலசுப்பிரமணி, மகளிர் அணி தலைவி தேன்மொழி, சமூக ஊடக பிரிவு தலைவர் சீனிவாசன், அம்பை ஒன்றிய தலைவர் சண்முகபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்