தி.மு.க நிர்வாகிகள் மீது, பா.ஜ.கவினர் புகார்

தி.மு.க நிர்வாகிகள் மீது, பா.ஜ.கவினர் புகார் கொடுத்துள்ளனர்.

Update: 2022-10-23 16:17 GMT

காட்பாடி பெரியபுதூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்யா. இவர் பா.ஜ.கவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் வேலூர் மாவட்ட தலைவராக உள்ளார். இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காட்பாடி பள்ளிகுப்பத்தில் கொடி கம்பம் ஏற்படுத்தி அதில் பா.ஜ.க. கொடியேற்றி உள்ளார்.

இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு பா.ஜ.க. கொடியேற்ற பள்ளிக்குப்பம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வெங்கடேசன், குப்பன், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் தி.மு.க.வினர் சூர்யாவை தள்ளிவிட்டு, கொடி கம்பத்தை சாய்த்து, பீடத்தை இடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அந்த வேலூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் அங்கு கூடினர். தி.மு.க.வினரும் திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி, இரு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் மீது பா.ஜ.க.வினரும், பா.ஜ.க. நிர்வாகிகள் மீது தி.மு.கவினரும் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்