பா.ஜ.க. பிரமுகர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

உளுந்தூர்பேட்டையில் பா.ஜ.க. பிரமுகர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-09-13 18:17 GMT

உளுந்தூர்பேட்டை

பா.ஜ.க. பிரமுகர்

உளுந்தூர்பேட்டை பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் பா.ஜ.க. பிரமுகர் மணிகண்டன்(வயது 40). இவருக்கும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சோரக்குப்பத்தை சேர்ந்த வேல் முருகன் மகள் ரேவதி(25) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் குடும்ப பிரச்சினையால் ரேவதி நேற்று முன்தினம் கணவர் வீ்ட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரேவதியின்சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை வேல்முருகன் கொடுத்த புகாாின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு துண்டியதாக மணிகண்டனை கைது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உடலை வாங்க மறுப்பு

இதற்கிடையே நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து ரேவதியின் உடலை அவரது உறவினர்களிடம் உளுந்தூர்பேட்டை போலீசார் ஒப்படைத்தனர். ஆனால் உடலை வாங்க மறுத்த அவர்கள் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதனால் திருச்சி-சென்னை சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்