'நெல்லை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவார்' - நயினார் நாகேந்திரன்

நெல்லை தொகுதியில் பா.ஜ.க.வின் வேட்பாளரே போட்டியிடுவார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-10 13:22 GMT

நெல்லை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இதனிடையே நெல்லை தொகுதியில் சரத்குமார் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதே சமயம் நெல்லை தொகுதியில் களமிறங்க பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை நாடாளுமன்ற தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "நெல்லை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவார். சமத்துவ மக்கள் கட்சி எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேர்தல் தேதி, வேட்பாளர் பட்டியல் ஆகியவை அறிவிக்கப்பட்ட பிறகு பிரச்சார பணிகளை தொடங்குவோம்" என்று தெரிவித்தார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்