திருப்பூர்:
திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பழைய பஸ் நிலையத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரை வைக்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பழைய பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்தும், சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயரை வைக்க வேண்டும் என்று கூறி பா.ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மலர்க்கொடி, பொதுச்செயலாளர் சீனிவாசன், கவுன்சிலர்கள் காடேஸ்வரா தங்கராஜ், குணசேகரன், பொருளாளர் நடராஜன் மற்றும் மண்டல, மாவட்ட அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.