பா.ஜ.க. பிரமுகரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

பா.ஜ.க. பிரமுகரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-06-03 21:38 GMT

திங்கள்சந்தை:

புதுக்கடை அருகே உள்ள பனங்கால்முக்கு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் ராதாகிருஷ்ணன் (வயது 39), பா.ஜ.க. பிரமுகர். இவருடைய மனைவி ரேணுகா (32). இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல இரணியல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மேக்கோடு என்ற இடத்தை சென்றடைந்த போது அந்த வழியாக அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். பின்னர் திடீரென அவர்களை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து ரேணுகா இரணியல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக சாகுல் ஹமீது என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த நியாஸ் அகமது (22) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்