பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்

பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்

Update: 2022-09-19 18:45 GMT


பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வருகிற 22-ந்தேதி வருகை தருகிறார். இதைதொடர்ந்து சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. ஓ.பி.சி. அணி சார்பாக அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. ஓ.பி.சி. அணி மாநிலத்தலைவர் சாய் சுரேஷ், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர், மாநில துணை தலைவர் பி.எம்.ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினரும் சிவகங்கை மாவட்ட ஓ.பி.சி. அணி பார்வையாளருமான நாகேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வடிவேல், அண்ணாதுரை, மோகன்தாஸ், மாவட்ட தலைவர்கள் கண்ணன் (திண்டுக்கல் மேற்கு), பரமசிவம்(தேனி), சிவகங்கை மாவட்ட பொதுச்செயலாளர்கள் நாதன், மதியழகன், மாவட்ட துணை தலைவர்கள் பத்மநாபன், முனியசாமி பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் சங்கர், முத்துவேல், செந்தில், வினோத், ரமேஷ் மாவட்ட பொருளாளர் பெரியதம்பி, மண்டல தலைவர்கள் மணிகண்டன், கணேசன், சின்னசாமி, கோபி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காரைக்குடி வரும் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு ஓ.பி.சி. அணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, அத்துடன் அனைத்து சமுதாய தலைவர்களையும், ஆன்மிக பெரியோர்களையும், ரசிகர் மன்றங்களை சார்ந்தவர்களையும் சந்தித்து ஆதரவு கோருவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்