பா.ஜ.க.-அ.தி.மு.க. உறவு கணவன்-மனைவி உறவு போன்றது
பா.ஜ.க.-அ.தி.மு.க. உறவு கணவன்-மனைவி உறவு போன்றது என்று எச்.ராஜா கூறினார்.
பா.ஜ.க.-அ.தி.மு.க. உறவு கணவன்-மனைவி உறவு போன்றது என்று எச்.ராஜா கூறினார்.
பேட்டி
மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாற்ற முடியாது
இந்து தர்மத்துக்கு தொன்றுதொட்டு வழங்கிவரும் பெயர் சனாதன தர்மம். சனாதன தர்மம் என்பது நிலையானது. தாய், சகோதரி, மனைவி ஆகிய உறவுகள் நிலையானது. இதனை எப்போதும் மாற்ற முடியாது. சனாதன இந்து தர்மத்தை இழிவுபடுத்துகிற கும்பல் வேரோடு களையப்பட வேண்டும். பா.ஜ.க.வினர், இந்து அமைப்பினர் அனைவரும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார் மனு அளிக்க வேண்டும்.
கணவன்-மனைவி உறவு போன்றது
ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டு வரப்போகிறோம் என பாரத பிரதமரோ அல்லது வேறு யாருமோ தற்போது தெரிவிக்கவில்லை. பா.ஜ.க.-அ.தி.மு.க. உறவு கணவன்-மனைவி உறவு போன்றது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.