பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்
பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தாமரைக்குளம்:
அரியலூரில் பஸ் நிலையம் அருகே பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். நகர தலைவர் மணிவண்ணன் வரவேற்றார். மாவட்ட மேற்பார்வையாளர் அய்யாரப்பன், பொது செயலாளர்கள் அருண்பிரசாத், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ்சிவா, பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போராட்டம் குறித்து பேசினர். தமிழக அரசு மாநிலம் முழுவதும் இந்து கோவில்களை இடித்து வருவதை கண்டித்தும், மக்கள் விரோதமாக அரசு செயல்படுவதாகவும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கூறி, தி.மு.க. அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் இளையராஜா, ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், திரளான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.