பா.ஜ.க. மாவட்ட தலைவர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு

Update: 2023-03-14 19:07 GMT

மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் பா.ஜ.க.வினர் அம்பேத்கர் சிலைக்கு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், நிர்வாகிகள் நாஞ்சில் பாலு, மோடி கண்ணன், பிரபாகரன், வினோத், சித்தர்க்காடு கோவி.சீதாராமன், வெங்கடேசன், பாரதி ஆகிய 8 பேர் மற்றும் பலர் மீது 3 பிரிவுகளின் கீழ் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்