காட்டெருமைகள் உலா; போக்குவரத்து பாதிப்பு
குன்னூர்-ஊட்டி சாலையில் காட்டெருமைகள் உலா வந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. உணவு தேடி குடியிருப்புகள், சாலைகளில் அடிக்கடி உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்தநிலையில் குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலை அருவங்காடு பகுதியில் காட்டெருமை கூட்டம் முகாமிட்டது. அவை சாலையின் குறுக்கே நின்றதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டது. இதையடுத்து அருவங்காடு போலீசார் காட்டெருமைகள் அங்கிருந்து செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.