ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
நல்லம்பள்ளி:
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஒன்றியகுழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. நிர்வாகிகள் பெரியசாமி, சண்முகம், மனோகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் காமராஜ், தமிழ், ஊராட்சி தலைவர்கள் புவனேஸ்வரி மூர்த்தி, சிலம்பரசன், தி.மு.க. நிர்வாகி மாதேஷ்குமார், அ.தி.மு.க. நிர்வாகி பிரேம்குமார், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.