300 ேபருக்கு பொங்கல் தொகுப்பு-தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்

மானாமதுரை தனியார் மகாலில் தி.மு.க. எம்.பி.கனிமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழரசி எம்.எல்.ஏ. பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.

Update: 2023-01-14 18:45 GMT

மானாமதுரை

மானாமதுரை தனியார் மகாலில் தி.மு.க. எம்.பி.கனிமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழரசி எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், மானாமதுரை சட்டமன்ற ஒன்றிய, நகர நிர்வாகிகள் 300 பேருக்கு ெபாங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் சேலை, ரூ.1000 மதிப்புள்ள பொங்கல் வைப்பதற்கு வெண்கல பானை, கரண்டி, பொங்கல் வைக்க தேவையான அரிசி, தேங்காய், வெல்லம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்கினார். விழாவில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பாவனி கணேசன், மானாமதுரை யூனியன் சேர்மன் லதா அண்ணாத்துரை, துணை சேர்மன் முத்துசாமி, நகர் கழக செயலாளர் பொன்னுச்சாமி, மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்