இருதரப்பினர் மோதல்

நடுவீரப்பட்டு அருகே இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு

Update: 2023-05-13 18:45 GMT

நடுவீரப்பட்டு

நடுவீரப்பட்டு வி.பெத்தாங்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயசூர்யா(வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஜெயசூர்யாவுக்கும், பழனிவேலுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் ஞானசவுந்தரி, வள்ளி ஆகிய 2 பெண்கள் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரும் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதில் ஜெயசூர்யா கொடுத்த புகாரின் பேரில் பழனிவேல், பாலாஜி, சங்கீதா, வள்ளி ஆகியோர் மீதும், வள்ளி கொடுத்த புகாரின் பேரில் கனகராஜ், ஜெயசூர்யா, ஞானசவுந்தரி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்