இரு தரப்பினர் மோதல்; 6 பேர் கைது

இரு தரப்பினர் மோதிக்கொண்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-10-25 20:30 GMT

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சினம்பூண்டி சாலுவம்பேட்டை தெருவில் முன் விரோதம் காரணமாக ஒரே தெருவை சேர்ந்த இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். அப்போது அவர்கள் கைகளாலும், கம்பாலும், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களாலும் ஒருவரை தாக்கிக் கொண்டனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த சூர்யா (வயது 26), ராஜராஜன் (32), ரஞ்சித் (23), ராசு (55), மதியழகன் (60) ஆகிய 5 பேரும், மற்றொரு தரப்பை சர்ந்த பாலமுருகன் (33), சுரேஷ் (35) ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து இரு தரப்பிலும் தோகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், ஒரு தரப்பை சேர்ந்த சசிகலா (38) உள்பட 8 பேர் மீதும், மற்றொரு தரப்பை சேர்ந்த செல்வி (43) உள்பட 12 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த சரத்குமார் (32), கோபி (35), பாரதி (37), முருகானந்தம் (43), அஜய் (20) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மோதல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்