இரு தரப்பினர் மோதல்; 16 பேர் வழக்கு

இரு தரப்பினர் மோதிக்கொண்டது தொடர்பாக 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-25 20:17 GMT

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே உள்ள சதாசிவபுரத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அன்று இரு தரப்பினரும் ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. அப்போது ஒரு தரப்பினர் சென்று ஒருவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வளர்மதி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் ரூரல் போலீசார், ஒரு தரப்பை சேர்ந்த காசி, அவரது மனைவி ராதா, சசிகுமார் அவரது மனைவி மோனிகா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல மற்றொரு தரப்பை சேர்ந்த சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில் அக்னி ராஜா, வெங்கடேசன் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்