தஞ்சை பெரியகோவில் நடை மூடப்பட்டது

சந்திரகிரகணத்தின்போது தஞ்சை பெரியகோவில் நடை மூடப்பட்டது

Update: 2022-11-08 19:50 GMT

தஞ்சாவூர்;

மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் நேற்றுகாலை வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. மதியம் 12.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். ஆனால் நேற்று சந்திர கிரகணம் என்பதால் முன்கூட்டியே 12 மணிக்கே நடை மூடப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் அனைவரும் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.சந்திர கிரகணம் முடிந்தவுடன் இரவு 7 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, பெருவுடையார் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாதாரனை செய்யப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் தஞ்சை மேலவீதியில் உள்ள சங்கரநாராயணசாமி கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு, இரவு 7 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்