டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வு விவகாரத்தில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு என புகார்கள் எழுந்துள்ள நிலையில், சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
சென்னை,
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தமிழக சட்ட சபையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பலர் தேர்ச்சி அடைந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரம் தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குரூப் 4 தேர்வு விவகாரத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது" என்றார்.