விருதுநகர் பாரப்பட்டி தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 39). டிரைவரான இவர் தனது வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். பின்னர் மறுநாள் காலையில் பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகிவிட்டது. இதுபற்றிய புகாரின் பேரில் இந்நகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.