பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.

Update: 2022-09-08 16:53 GMT

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சைக்கிள் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சிவகங்கை பிரிவு சார்பாக அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 13, 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது. இதில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 15 கி.மீட்டருக்கும், மாணவிகள் 10 கி.மீட்டருக்கும், 15 வயதிற்ட்குபட்ட மாணவர்கள் 20 கி.மீட்டருக்கும், மாணவிகள் 15 கி.மீட்டருக்கும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 20 கி.மீட்டருக்கும், மாணவிகள் 15 கி.மீட்டருக்கும் கலந்து கொள்ளும் வகையில் போட்டிகள் நடைபெற உள்ளது.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் வருகின்ற 15-ந் தேதி காலை 6 மணிக்கு சிவகங்கை அரண்மனை வாயிலில் வருகை தர வேண்டும். கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து பிறந்த தேதி, சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் கொண்டு வரவேண்டும். சாதாரண சைக்கிள்களை போட்டியில் பயன்படுத்த வேண்டும். பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்பட மாட்டாது.

பரிசுகள்

இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும். மேலும், 4 முதல் 10 இடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.250 வீதம் வழங்கப்படும்.

இதில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்வதற்கு 04575-299293 மற்றும் 7401703503 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்