ரூ.93 லட்சத்தில் 3 திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை

ரூ.93 லட்சத்தில் 3 திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.

Update: 2022-12-20 18:33 GMT

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி செம்படாபாளையம் பகுதியில் 15-வது நிதிக்குழு மானியத்தில் கடைவீதி பஸ் நிறுத்தம் வரை ரூ.20 லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி, கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் 2022-2023 மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சத்தில் செம்படாபாளையம் பகுதியில் புதிதாக பூங்கா அமைக்கும் பணி, அதே திட்டத்தின் கீழ் ராம் நகர் பகுதியில் ரூ.40 லட்சத்தில் புதிதாக பூங்கா அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். புகழூர் நகராட்சி ஆணையாளர் கனிராஜ் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ கலந்து கொண்டு ரூ.93 லட்சம் மதிப்பிலான 3 பணிகளுக்கும் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்