ரூ.2.95 கோடியில் ஆய்வகங்கள் கட்ட பூமிபூஜை

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் ரூ.2.95 கோடியில் ஆய்வகங்கள் கட்ட பூமிபூஜையை மதியழகன் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-03 18:45 GMT

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கல்லூரி சார்பில் புதிய ஆய்வகங்கள், கட்டிடங்கள் கட்ட அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி அரசு உத்தரவிட்டது. முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் செலவில் 26 அரசு பல்வகை தொழில்நுட்பக்கல்லூரிகள் மற்றும் 55 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரிக்கு, கழிப்பிட வசதியுடன் கூடிய 6 அறிவியல் ஆய்வகங்கள் கட்ட காமராஜர் கல்லூரி வளர்ச்சி திட்டத்தில் 2.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. புதிய ஆய்வகங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. கல்லூரி முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், அறிஞர், ஊராட்சி மன்ற தலைவர்கள் தீபா நாகராஜ், மஞ்சுளா வெங்கடேசன், கவுன்சிலர்கள் கலா வேலாயுதம், மற்றும் முருகன், ஆனந்தன், கோபாலகிருஷ்ணன், அன்பரசு, காண்டிராக்டர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்