திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை

எருமப்பட்டியில் திட்டப்பணிகளுக்கு ராஜேஷ்குமார் எம்.பி. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-06 18:45 GMT

எருமப்பட்டி

எருமப்பட்டி பேரூராட்சியில் 5 மற்றும் 12, 13 ஆகிய வார்டுகளில் சந்தைப்பேட்டை முதல் ஜீவா தெரு வரை லைன் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. இதில் நாமக்கல் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் எம்.பி. கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரவி முன்னிலை வகித்தார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, அட்மா குழு தலைவர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 13-வது வார்டு ஜீவானந்தம் தெரு சந்தை அருகே உள்ள ஆண்கள் சுகாதார வளாகம் பராமரிக்கவும், 12-வது வார்டு காங்கிரஸ் மடம் தெருவில் சிமெண்டு சாலை அமைக்கவும், 5-வது வார்டு கங்கா நகரில் சிமெண்டு சாலை அமைக்கவும் அவர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார். அதேபோல் 14-வது வார்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரே ஒரு லட்சம் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி புதிய நீர்தேக்க தொட்டி அமைக்கவும், எருமப்பட்டி பேரூராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் குடிநீர் குழாய் உள்பட உள்பட திட்டப்பணிகளுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அரசு வக்கீல் அறிவழகன், பவித்திரம் கண்ணன், வார்டு கவுன்சிலர்கள் விஜயா, கீதா, அணில் என்கிற உதயகுமார், வேலுசாமி மற்றும் எருமப்பட்டி பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுரேஷ், கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்