புதிய ரேஷன்கடைக்கு பூமி பூஜை

விளாத்திகுளத்தில் புதிய ரேஷன்கடைக்கு பூமி பூஜை நடந்தது.

Update: 2022-08-10 14:28 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் சாலையம் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதியரேஷன் கடை கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு தலைமை தாங்கினார். விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அயன் ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புதிய ரேஷன்கடை கட்டுமானபணிக்கான பூமிபூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா பசும்பொன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன் பட்டி நல்லழகு நாடார் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2019- 2020, 2021-2022 தேர்வில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் எம்.எல்.ஏ. வழங்கினார்

அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையையும் அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திராணி, விளாத்திகுளம் செயல் அலுவலர் சுந்தரவேல் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்