கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஊராட்சி வள மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை

கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஊராட்சி வள மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2022-06-30 16:53 GMT


கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்.ஜி.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் மாவட்ட ஊராட்சி வள மைய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன், நகர மன்ற தலைவர் சுப்ராயலு, ஒன்றிய பொறியாளர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து, மாவட்ட ஊராட்சி வளமைய கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், அரவிந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மடம் பெருமாள், ராமமூர்த்தி, காமராஜ், சண்முகம், மாவட்ட கவுன்சிலர் முருகேசன், நகர மன்ற துணை தலைவர் ஷமிம்பானு அப்துல்ரசாக், ஸ்ரீலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்