பூலித்தேவன் பிறந்தநாள் விழா

வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-02 16:23 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளருமான அ.மனோகரன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக சங்கரன்கோவில் வழியாக வந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் தலைமையில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மூர்த்திபாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, தென்காசி மாவட்ட மாணவரணி இணை செயலாளர் உள்ளார் எஸ்.வி.மூர்த்தி, வாசுதேவநல்லூர் பேரூர் கழக செயலாளர் சீமான் மணிகண்டன் மற்றும் கட்சியினர் திராளானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் ஏற்பாட்டில், தென்காசி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் எஸ்.கார்த்திகை செல்வம், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்து வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவர் யு.எஸ்.ஏ.வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்