பக்தர்குளம் மாரியம்மன் கோவில் திருவிழா

வேதாரண்யம் அருகே பக்தர்குளம் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது

Update: 2022-08-17 18:33 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளியில் பிரசித்தி பெற்ற பக்தர்குளம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பல்வேறு காவடிகளை எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் வீதி உலா முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிவித்தும், அர்ச்சனை செய்தும் வழிபட்டனர். மேலும் மாரியம்மன், கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெற்று அகஸ்தியன் பள்ளி அகத்தியர்கோவிலடியில் மஞ்சள் விளையாட்டு நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்