பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா

சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி வெள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-10-16 18:45 GMT

சாயல்குடி,

சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி வெள்ளப்பட்டி கிராமத்தில் சத்திரிய இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட கற்பக விநாயகர், பெருமாள், பத்ரகாளியம்மன், உஜ்ஜயினி, மாகாளியம்மன் ஸ்ரீதீவு முனியசாமி கோவில் வருடாந்திர கொடை விழா நடைபெற்றது. விழாவுக்கு இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராமர் தலைமை தாங்கினார். செயலாளர் முருகேசன், பொருளாளர் சவுந்திரபாண்டி, நிர்வாகத்தவர்கள் ராஜா, ராமச்சந்திரன், ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விநாயகர், பெருமாள் சுவாமி அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

கடந்த 10-ந் தேதி கடலில் தீர்த்தமாடி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டி காப்பு கட்டுதல் மற்றும் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தல். சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு படை கஞ்சி காய்ச்சுதல், அம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டி பூஜைகள் நடந்தது. ஆண்கள், பெண்களின் கோலாட்டம், கும்மியாட்டம் நடைபெற்று முளைப்பாரி நகர்வலம் வந்து கடலில் கரைக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவு நாளில் கடற்கரையில் உள்ள ஸ்ரீதீவு முனியசாமிக்கு அபிஷேக பூஜை நடந்தது. கிடாய் வெட்டி பனை ஓலையில் அசைவ விருந்து நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்