கள்ளிப்பட்டு-துரூர் இடையே ரூ.80 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி உதயசூரியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கள்ளிப்பட்டு-துரூர் இடையே ரூ.80 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை உதயசூரியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-01 17:00 GMT

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் புதுபாலப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட துரூர் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு சாலை வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் துரூர் கிராமத்தில் இருந்து கள்ளிப்பட்டு கிராமம் வழியாக நகர பகுதிகளுக்கு ஒத்தையடி பாதையாக நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி அமைத்து தரக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு, கள்ளிப்பட்டு-துரூர் இடையே ரூ.80 லட்சம் நிதியில் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் சாலை அமைப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து மலைவாழ் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்ததன் காரணமாக சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கள்ளிப்பட்டு-துரூர் இடையே சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார். இதில் கல்வராயன்மலை ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஒன்றியக்குழு துணை தலைவர் பாஷா பிஜாகிர்உசேன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் சாரதா சின்னையன், துணைத் தலைவர் முத்தையா, ஒன்றிய பொறியாளர் ராஜகோபால் அருண் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்