மதுரை-தேனி இடையே மேலும் ஒரு முறை ரெயில் இயக்க வேண்டும்

மதுரை-தேனி இடையே மேலும் ஒரு முறை ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்குழு தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Update: 2022-06-09 16:44 GMT

திண்டுக்கல்-குமுளி அகல ரெயில்பாதை திட்டப் போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மதுரை-தேனி ரெயில் காலை 8.05 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 9.35 மணிக்கு தேனிக்கு வருகிறது. பின்னர் மாலை 6.15 மணிக்கு தேனியில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு மதுரைக்கு சென்றடைகிறது. இடைப்பட்ட நேரத்தில் தேனியில் நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே, காலை 10 மணிக்கு தேனியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு செல்லும் வகையிலும், மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு தேனிக்கு வரும் வகையிலும் மேலும் ஒருமுறை ரெயில் இயக்க வேண்டும். அவ்வாறு இயக்கினால் தேனி மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதுபோல், மதுரையில் இருந்து சென்னை செல்லும் ஏதாவது ஒரு ரெயிலை தேனியில் இருந்து புறப்படும்படி செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், தேனி-போடி இடையிலான ரெயில்பாதை திட்டப் பணிகளை விரைந்து முடித்து போடி வரை ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்